தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் கோவையின் சிறுவாணி நீர்த்தேக்கம் : கோவை மாநகரின் குடிநீர் விநியோகம் தடைபடுமா..?

கோவை : கோடை மழை வழக்கத்தை விட குறைவாக பெய்ததன் காரணமாக கோவை மாவட்டத்தின் நீராதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.

கோவை : கோடை மழை வழக்கத்தை விட குறைவாக பெய்ததன் காரணமாக கோவை மாவட்டத்தின் நீராதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. 

கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக சிறுவாணி நீர்த்தேக்கமும் இருந்து வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து சாடிவயல் குடிநீர் நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகருக்கு கடந்த சில வாரங்களாக விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை மழையின் அளவு மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், சிறுவாணி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு மளமளவென குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கோவை மாநகருக்கு ஜுன் மாதம் இறுதி வரையில் மட்டும் குடிநீர் விநியோகிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிறுவாணி அணையின் மூலம் 22 கிராமங்கள் மற்றும் கோவை மாநகராட்சியின் 23 வார்டுகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...