மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு?

கோவை : மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையினால் 8-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை : மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையினால் 8-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

1968-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தேசிய கல்வி கொள்கையானது 10+2 என்ற அடிப்படையில் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது, 10+2 பாடத்திட்டத்தின் முறைப்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் தொடக்கக் கல்வி நிலையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் இரண்டாம் நிலையும், 11 மற்றும் 12-ம் வகுப்பு உயர்நிலையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு வரைவு அறிக்கையை பரிந்துரைந்து செய்துள்ளது. இந்தக் கல்விக் கொள்கையின்படி, கல்வி நிலைகள் 5+3+3+4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ப்ரி- பிரைமரி பள்ளி படிப்பு மற்றும் 1 மற்றும் 2 வகுப்புகள் பவுண்டேசனல் நிலையாகவும், 3,4 மற்றும் 5-ம் வகுப்புகள் லேட்டர் பிரைமரி நிலையாகவும், 6,7 மற்றும் 8 அப்பர் பிரைமரியாகவும், 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் உயர்நிலையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் 8-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 

இது தொடர்பாக ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், "இந்தப் புதிய கல்வி கொள்கை மீது கருத்து தெரிவிக்க வரும் ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும், மிகக்குறைந்த வயதிலேயே, அதாவது 13 வயதிலேயே பொதுத்தேர்வின் அழுத்தத்தை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், இந்த புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கல்வியாளர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், எனக் கூறினார். 

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தற்போது சி வகுப்பு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது, ப்ளம்பிங், கார்ப்பென்ட்ர் மற்றும் எலக்ட்டிரிக்கல் போன்ற பணிகளை செய்வதற்கு போதிய பணியாளர்கள் கிடைப்பதில்லை. ஏனெனில், பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்புகளை முடித்து விட்டு, வங்கி உள்ளிட்ட சொகுசு பணிகளில் சேருகின்றனர். இந்த நிலையில், அரசு தற்போது, மறைமுகமாக பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. 8-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், கல்வியை இடைநிறுத்தி விட்டு, இது போன்ற பணிகளை தேர்வு செய்து கொள்கின்றனர்," என்றார். 

"10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு பள்ளிகள் அழுத்தங்களைக் கொடுக்கின்றனர். அரசு விதிகளை மீறி கோடைக்காலங்களிலும் இடைவேளை இல்லாமல் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இந்த சூழலில் 8-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வை எதிர்கொள்வது கடினமானதாகும். எனவே, இந்த புதிய கல்விக் கொள்கைக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும்," என்கிறார் ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் தாய் சுதா.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...