கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியின் மூலம் புள்ளி மானை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் புள்ளி மான், காட்டெருமை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி ஆற்று நீர் தேக்கப்பகுதியில் தண்ணீர் தேடி வரும் புள்ளி மான்களை வேட்டையாடி, அதன் இறைச்சியினை விற்பனைக்காக எடுத்து செல்வதாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் சரக பகுதியில் சிறுமுகை வனச்சரகர் மனோகரன், வனவர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 15 பேர் அடங்கிய குழுவினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருப்பராயன் கோயில் பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு வனத்துறையினர் வனப்பகுதியில் 3 குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் ஏழு பேர் கொண்ட மர்ம நபர்கள் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அதில், இரண்டு பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், 2 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர், வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிட்டே பாளையம் பெரியதோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் தேவராஜ் (45), சம்பர வள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் குமாரசாமி (45) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 15 கிலோ எடையுள்ள மான் இறைச்சி, ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி, வெடி பொருட்கள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவிநாசி பகுதியைச் சேர்ந்த அழகிரி சாமி என்பவருக்கு விற்பனை செய்ய 7 பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், பகலில் விவசாயப் பணியிலும், இரவில் வேட்டையாடும் பணியிலும் இக்கும்பல் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தேவராஜ், குமாரசாமி ஆகியோரை வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.