கோவை மத்திய சிறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சமையலர், நாவிதர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மத்திய சிறையில் உள்ள சமையலர், நாவிதர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு சிப்ப எழுத்தர், ஒரு நாவிதர், இரண்டு சமையலர், ஒரு லாரி ஓட்டுநர், இரண்டு நெசவுப் பணியாளர், ஒரு பாய்லர் பயர்மேன், சிங்காநல்லூர் வெளிச்சிறையில் உள்ள ஒரு சமையலர், கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள 9 துப்புரவு பணியாளர் மற்றும் 10 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த ஆண் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை (மொபைல் எண் குறிப்பிட்டு) சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு வரும் 10-ம் தேதிக்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பதவிகளை நிரப்புவதற்கான நேர்காணல் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் பின்னர் தெரிவிக்கப்படும். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...