கோவை நாணயவியல் சங்கம் சார்பில் 3 நாள் நாணயக் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை : கோவை நாணயவியல் சங்கம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி 'காயினெக்ஸ் 2019' இன்று தொடங்கியது.

கோவை : கோவை நாணயவியல் சங்கம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி 'காயினெக்ஸ் 2019' இன்று தொடங்கியது. 



இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியை மைசூ நாணயவியல் சங்கத்தின் தலைவர் துவாராகநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை நாணயவியல் சங்கத்தின் துணை தலைவர் ராமலிங்கம், பொருளாளர் ஆனந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், பாஸ்கர், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சியில் பழங்காலத்து நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 1862-ம் ஆண்டு வெளிவந்த ஒரு ரூபாய் நாணயம் பற்றிய அபூர்வ தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 



இந்த நிகழ்ச்சியில் கோவை நாணயவியல் சங்கத் தலைவர் டி.எம். ரவிச்சந்திரன் கூறியதாவது :- பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் ஆகியவற்றை சேகரிப்பதால் வரலாற்று சான்றுகள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. பழங்கால நாணயங்களினால் அன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சி காலம், கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை தெளிவாக உணர முடியும். 



தற்போது, நாணய சேகரிப்பில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, நாணயவியல் ஆராய்ச்சியாளர்கள் பலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் மூலம் பழங்கால நாணயங்களைப் பற்றிய பலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் மூலம் பழங்கால நாணயங்களைப் பற்றிய பல புதிய தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. 



இந்தக் கண்காட்சியின் மூலம் நாணயவியல், தபால் தலை மற்றும் பழங்காலப் பொருட்களின் வரலாற்று அறிவையும், மதிப்பையும் எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சேகரிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக கண்டுகளிக்க நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம், என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...