தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் செயல்படுவதற்கான அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு

கோவை : தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை : தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் வங்கிகள், கடைகள், திரையரங்குகள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கான அனுமதி அளிக்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், கடைகளை 24 மணிநேரமும் இயக்குவதற்கு உரிய அனுமதியை மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம், கடைகள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கு அனுமதி அளித்தது. 

இந்த நிலையில், தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தொழிலாளர் ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கு தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...