நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து கலந்து கொள்ளும் விதமாகவும் போட்டிகள் நடைபெற்றன. மேலும், படகு இல்லத்தில் பணி செய்து வரும் ஊழியர்களுக்காக ஒரு சிறப்பு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற போட்டியில் உதகையைச் சேர்ந்த அர்ச்சனா மற்றும் கார்த்திக் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதேபோன்று பெண்கள் மட்டும் கலந்து கொண்ட போட்டியில் திருச்சியைச் சேர்ந்த திவ்யா மற்றும் பாரதி ஆகியோரும், ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட போட்டியில் உதகையைச் சேர்ந்த பிரிட்டோ ராஜ் ஆகியோர் முதல் பரிசினைப் பெற்றனர்.

இந்தப் போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு படகு போட்டியை சிறப்பித்தனர்.