தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பி. துரைராசு நியமனம்

சென்னை : தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பி. துரைராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பி. துரைராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தற்போது அரசு ரப்பர் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வரும் இவர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த மல்லேசப்பாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பி. துரைராசு வனத்துறையில் முனைவர் பட்டமும், விவசாயத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். 1985-ம் ஆண்டு முதல் இந்திய வனத்துறை பணி அதிகாரியாக தேர்வான இவர், வனத்துறையில் 34 வருடங்கள் பணி அனுபவம் பெற்றவர். வேளாண் வனவியல், வனக் கல்வி குறித்த புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

 

இதேபோல, 2016-ம் ஆண்டு கோவை மாவட்டத்தின் முன்னாள் வன பாதுகாவலராக இருந்த ஐ. அன்வரூதின், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகவும், தமிழக வனத்துறை அகாடமியின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வனத்துறையின் முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், அன்வரூதினை சேலம் வட்டத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநராகவும் பணியாற்றினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...