எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடப்பதைக் கண்டித்து 7-ம் தேதி போராட்டம் : மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்

கோவை : எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடப்பதைக் கண்டித்து வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கோவையில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை : எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடப்பதைக் கண்டித்து வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக கோவையில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 



வடகோவையில் உள்ள தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச். எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி, எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் வருகின்ற 7-ம் தேதி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்களின் பிரச்சனைகள் தேக்கம் அடைந்துள்ளது, உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும், குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் செய்யாத காரணத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், எனவே, மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பேசியதாவது :- கடந்த 2010-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்குண்டான சம்பந்தப்பட்ட இடங்களில் வசித்து வந்த இட உரிமையாளர்களிடம் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் முறையாக நடத்தாமல் தான்தோன்றித்தனமாக மேம்பாலப் பணிகளைத் துவக்கியது. இட உரிமையாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சுமூகமான பேச்சுவார்த்தை இல்லாததால், அந்த மக்களை மதிக்காமல் அரசு கட்டுமானப் பணிகளை தொடர்ந்தது. இதனால், மேம்பாலத்தை ஒட்டி வருகின்ற அணுகு சாலைக்கு (Service Road) தேவையான நிலத்தைக் கையகப்படுத்தாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட காரணத்தால், நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, தங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உரிய நேரத்தில் வழங்காமல் அரசு விதிமீறி செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய காரணத்தால், மேம்பாலக் கட்டுமானப் பணிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

இன்றைக்கு இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகம் இன்னும் அந்த மக்களை அழைத்துப் பேசி சுமூகமான தீர்வு காணாமல் இழுத்தடித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்துக்கு வேறு வழியின்றி தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சிங்காநல்லூர், நீலிக்கோணம்பாளையம், நேதாஜி நகர் வரக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிலாளர்கள், வேலைக்குச் செல்வோர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக் கூடியவர்கள் வேறு வழியின்றி தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் கூட அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் ஏற்றி செல்லக் கூட வழியில்லை. 

இப்படி தி.மு.க. ஆட்சியில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகள் என்ற ஒரே காரணத்தால், காழ்ப்புணர்ச்சியோடு இந்த காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது. இதனைக் கண்டித்து வரும் 7-ம் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், எனக் கூறினார். 



மேலும், கோவை மக்களவை தொகுதியில் 1,79,000 வாக்குகள் வித்தியாசத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.ஆர். நடராஜனை, மகத்தான வெற்றி பெற செய்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வி.எஸ் சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் தனபால் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...