பெற்ற மகனையே கத்தியால் சரமாரிக் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை : உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலிபர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் : வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை தட்டிக் கேட்ட மகனை ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அவிநாசி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை தட்டிக் கேட்ட மகனை ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அவிநாசி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசியை அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (21). இவர், திருப்பூரில் வங்கி முகமை அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன் இவரது தாயார் கிருஷ்ணவேணி (35) வசித்து வருகிறார். இவர், அவிநாசியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை செல்வம் (46) டிரைவராக கோவையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இவர்களை விட்டு பிரிந்து சென்று கோவையில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இதனால், அவ்வப்போது, ராதாகிருஷ்ணன் தனது தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உன்னால் தான் நானும் அம்மாவும் கஷ்டப்படுகிறோம் என்று சொல்லி சண்டை போட்டு வந்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த செல்வம் நேற்று அவிநாசியை அடுத்த எஸ்.மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டு கதவு சாத்தப்பட்டிருந்த நிலையில், செல்வம் கதவை தட்டியுள்ளார். இதைக் கேட்டு, வீட்டில் தனியாக இருந்த மகன் ராதாகிருஷ்ணன் கதவை திறந்துள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக, செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெற்ற மகன் என்றும் பாராமல் ராதாகிருஷ்ணனின் வயிறு, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதையடுத்து, ராதாகிருஷ்ணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதைக் கண்ட அவரது தந்தை செல்வம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். பின்னர், ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த அவருக்கு, அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவியளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, மகனை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவான டிரைவர் செல்வத்தை அவிநாசி போலீசார் தேடி வருகின்றனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...