அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சுடிதாருடன் துப்பட்டா கட்டாயம் : ஆண்கள் டி-சர்ட் அணிந்து வர தமிழக அரசு அதிரடி தடை

சென்னை : அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் அணியும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிய வேண்டுமெனவும், ஆண் பணியாளர்கள் டி-சர்ட் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை : அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் அணியும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிய வேண்டுமெனவும், ஆண் பணியாளர்கள் டி-சர்ட் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆடை அணிந்து வருவதில் சில கட்டுப்பாடு விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் பணி புரியும் ஆண், பெண் ஊழியர்கள் நாகரீக உடை என சில ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத பிரச்சனைகளையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புகாரை தொடர்ந்து ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் "அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமிஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரலாம். ஆனால், சுடிதார் மற்றும் சல்வார்கமிஷ் அணிந்து வரும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும். இதேபோல, ஆண்கள் சாதாரண பேண்ட், சட்டை அணிந்து பணிக்கு வரலாம். டீ-சார்டுடன் வருவதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் ஆண்கள் கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால், துப்பட்டா கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...