கோவை : புகைப்பிடிப்பவர்களை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக புகையிலை தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 35 சதவீதத்திற்கும் அதிகமாக புகைப்பிடிப்பவர்களை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், இதன் ஒரு பகுதியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று வெளியிட்டார்.
இதன் பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர். குகன் பேசுகையில், "ஒவ்வொரு 10 இந்தியர்களில் ஒருவர் என மொத்தம் 9 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் உலகளவில் நுரையிரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலும், புகைப்பிடிப்பவர்களை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,” என்றார்.