கோவை : கோவை மாவட்டம் வெள்ளமடை ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஒரு பகுதியாக, உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியரால் கோவை மாவட்டம் வெள்ளமடை ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமின் கீழ் இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லைய்யா கலந்து கொண்டு எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார். விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மூ. இரா. பாக்கியவதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், முனைவர்கள் லதா, கலையரசன், ராஜி, விஜயகுமாரி மற்றும் சரண்யா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக, நலப்பணித் திட்ட மாணாக்கர்கள் புகையிலை மற்றும் மது ஒழிப்புப் பேரணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாணவர்களால் பொதுச் சுவர்களில் புகையிலை எதிர்ப்பு பற்றிய வரைபடங்கள் தீட்டப்பட்டன.