நீலகிரி : கோத்தகிரி அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கால்நடை விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட வண்டிச்சோலை எமகுண்டு பகுதி வனமும், அதனை ஒட்டி தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளன. இப்பகுதியில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், எமகுண்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா என்பவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். வெகுநேரம் ஆகியும் ஆடுகள் திரும்பாததால், சந்தேகம் அடைந்த ராஜன் தேயிலை தோட்டத்திற்கு சென்று தேடியுள்ளார். அப்போது, ஒரு ஆடு சிறுத்தை தாக்கியதில் இறந்து கிடந்துள்ளது. அருகில் மற்றொரு ஆடு கழுத்து பகுதியில் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்துள்ளது. மேலும், 3 ஆடுகள் காணாமல் போயுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி ராஜா வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, கட்டப்பெட்டு வனச்சரகர் கணேஷ் ஆலோசனையின்படி, வனவர் சசிதரன் மற்றும் வனக்காப்பாளர் விக்ரம் உட்பட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், ஆடு இறந்ததை உறுதி செய்துவிட்டு, பின்னர் அதே இடத்தில் அதனை புதைத்தனர். மேலும், காயமடைந்த ஆட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் கூலித் தொழிலாளர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.