கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பணி முடிந்து வரும் போது தெருநாய்களின் தொல்லைகளை எதிர்கொள்பவர்கள், இது குறித்து பல்வேறு புகார்களை அடுத்தடுத்து அளித்துள்ளனர். தெருக்களில் நடமாடுவோருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம், இந்த விவகாரத்தில் கோவை மாநகராட்சி செயல் இழந்து கிடப்பதே ஆகும்.

"வாகனத்தில் செல்லும் போதோ அல்லது நடந்து செல்லும்போதோ சாலையில் பள்ளங்கள் மற்றும் தெருநாய்கள் உள்ளதா..? என்பதை பார்த்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலைகளில் நடமாடும் தெருநாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதே, தெருநாய்களுக்கான கருத்தடை திட்டத்தை கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு சான்றாகும்," என்கிறார் பாரதி பார்க் சாலையில் உள்ள குடியிருப்புவாசி மருதாச்சலம்.

மேலும், நகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் இந்தத் தெருநாய்களின் தொல்லை விட்டபாடில்லை. "எந்தநேரத்தில் சென்றாலும் 5 முதல் 7 தெருநாய்கள் நடைபாதையில் நடந்து செல்பவர்களுடன் சுற்றித் திரிகிறது. நடைபயிற்சியின் போது மக்கள் சற்று வேகம் அதிகரித்து ஓடினால், அவர்களை கடிக்க முயல்கின்றது," என்றார் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நாள்தோறும் நடைபயிற்சி செய்யும் கமல்நாத்.
கரும்புக்கடை மற்றும் குனியமுத்தூர் பகுதிகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். மேலும், பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவுகளை வழங்குவதாலும் அதன் எண்ணிக்கை உயருகிறது.
"இரவு நேரங்களில் பயணிக்கும் போது, கூட்டம் கூட்டமாக திரியும் தெருநாய்களுக்கு மத்தியில் பயணிப்பது மிகவும் கடுமையானதாகும்," என்றார் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கிம்.

மேலும், உக்கடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ள நிலையில், புண்கள் மற்றும் தோல் நோய்களுடன் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், ரேபிஸ் நோய் பரவவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நாள்தோறும் மாலை 7.30 மணிக்கு தெருநாய்களுக்கு எலும்புகளை உணவாகப் போட்டு வருகிறார். அதனை நாம் தடுத்தாலும், அவர் வேறு பகுதிக்கு சென்று மீண்டும் தெருநாய்களுக்கு உணவளிப்பதை தொடருகிறார். இதுபோன்று தொடர்ந்து, உணவு அளித்து வருவதால், காலப்போக்கில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, அது நமக்கு தீங்கானதாக அமையும் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்," என்கிறார் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி.

மூடிக்கிடக்கும் நாய்களுக்கான கருத்தடை மையம் :
தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம், 2017-ம் ஆண்டு உக்கடம் பகுதி மக்கள் நடத்தியதால், கால்நடை கருத்தடை மையம் மூடப்பட்டதே ஆகும். இந்த மையத்தின் மூலம் கோவை மாநகராட்சியின் 80 வார்டுகளில் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்த மையம் மூடப்பட்டது முதல் மாற்று இடம் கோவை மாநகராட்சியால் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக எச்.ஏ.எஸ். அமைப்பைச் சேர்ந்த மினி வாசுதேவன் கூறியதாவது :- எச்.ஏ.எஸ். அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கோவை மாநகரில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை சுமார் 46,000 உள்ளது. இது ஆபத்தானதாகும். தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம், 2017-ம் ஆண்டு உக்கடம் பகுதி மக்கள் நடத்தியதால், கால்நடை கருத்தடை மையம் மூடப்பட்டதே ஆகும். இந்த மையம் மூடப்பட்டது முதல் மாற்று இடம் கோவை மாநகராட்சியால் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எனக் கூறினார்.
மாநில கவுரவ கால்நடை நல அதிகாரி கல்பனா வாசுதேவன் கூறுகையில், "பி.எஃப்.ஏ.வினால் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 16,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கருத்தடை மையம் மூடப்பட்டதால், சிகிச்சை மேற்கொள்ள முடியாமல், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள மையத்தை இரண்டாக பிரித்தோ அல்லது மாற்று இடம் தேர்வு செய்து கருத்தடை மையம் அமைக்க வேண்டும். ஒருவேளை மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டாலும், கருத்தடை மையம் கட்டுவதற்கு ஒரு ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் நாய்களுக்கு இரண்டு கர்ப்ப காலங்கள் முடிந்துவிடும். இதன் மூலம், நாய்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடும்," எனக் கூறினார்.
அறுவை சிகிச்சைக்கான தொகையில் சிக்கல் :
எச்.ஏ.எஸ். அமைப்பைச் சேர்ந்த மினி வாசுதேவன் கூறியதாவது :- பி.எஃப்.ஏ. மற்றும் எச்.ஏ.எஸ். அமைப்புகளில் செய்யப்படும் கருத்தடைகளுக்கான தமிழக அரசின் மானியம் போதுமானதாக இல்லை. 2006-ம் ஆண்டு முதல் கருத்தடை சிகிச்சைக்கு ரூ. 445 ஆக வழங்கப்பட்டு வந்த மானியம், ரூ. 700 ஆக உயர்த்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை வெறும் ரூ. 445 மட்டுமே வழங்கப்படுகிறது. அதேவேளையில், ஒரு அறுவை சிகிச்சைக்கு ரூ.1,000 வீதம் செலவாகி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் அதில் பாதி மட்டுமே எங்களுக்கு வழங்குகின்றனர். எனவே, அதிகாரிகள் சிகிச்சைக்கான செலவுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்," எனக் கூறினார்.

கோவையில் புதிய கருத்தடை மையம் :
இந்த நிலையில், கோவை மாநகரின் கிழக்கு மண்டலத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் ரூ. 1 கோடி மதிப்பில் கால்நடை கருத்தடை மையம் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.