வெள்ளமடை ஊராட்சியில் வேளாண் பல்கலை., மாணவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை : அன்னூர் தாலுக்கா வெள்ளமடை ஊராட்சியில் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கோவை : அன்னூர் தாலுக்கா வெள்ளமடை ஊராட்சியில் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். 



கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா, வெள்ளமடை ஊராட்சியில் கிராம ஊராட்சி அலுவலகத்திலிருந்து காலை 9.30 மணியளவில் 300 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டும், பிரச்சாரங்கள் வழங்கியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணி சுமார் 2 கி.மீ. தொலைவு நடைபெற்றது. இப்பேரணியைத் தொடர்ந்து, 10 மாணவர்கள் சாமநாயக்கன்பாளையம் பள்ளி சுவர்களில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர். 

மேலும், வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்தல் குறித்த கருத்தரங்கில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காய்கறிப் பயிர்கள் துறையின் இணைப்பேராசிரியர் அ. சங்கர், வீட்டுக்காய்கறித் தோட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்களையும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், மண்புழு உரம் தயாரிக்கும் முறையையும், அதன் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழல் துறையின் துணைப்பேராசிரியர் ர. சுனிதா விளக்கினார்.

 

மாலையில் உழவியல் துறையின் இணைப் பேராசிரியர் ந. தவபிரகாஷ், வேளாண் சாகுபடியில் நவீன தொழில்நுட்ப உத்திகள், பயிர் சுழற்சி, மண் வளம் ஆகியன குறித்து ஆலோசனை வழங்கினார். அவர் “மண்ணிற்கு உரமிடம் வேண்டும் பயிருக்கு அல்ல” என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெள்ளமடை கிராம சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...