கோவை : முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் முதிர்வு தொகை பெறும் பொருட்டு, வைப்பு நிதி பத்திரத்தினை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- தமிழக முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், ஊரகப் பகுதியில் உள்ளவர்கள், தங்களது வைப்பு நிதிபத்திரத்துடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (பி.டி.ஓ) உள்ள மகளிர் ஊர்நல அலுவலர், விரிவாக்க அலுவலர்களை நேரில் சென்று முதிர்வுத் தொகையினை பெறும் பொருட்டு வைப்பு நிதிபத்திரத்தினை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், நகர்ப்புற பகுதியில் உள்ளவர்கள், அந்தந்த பகுதிக்கான மண்டல அலுவலகங்களில் உள்ள மகளிர் ஊர்நல அலுவலர், விரிவாக்க அலுவலர்களிடம் ஒப்படைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேரில் செல்லும் பொழுது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றைக் கொண்டு செல்லுமாறும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மண்டல அலுவலகங்களிலும் நேரில் சென்று பயன்பெற்று கொள்ளலாம், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.