கோவை : ஆசிரியர் தகுதி தேர்வுகள் ஜுன் மாதம் நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு ஜுன் மாதம் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பு ஜுன் 07-ம் தேதி வரை நடக்கிறது.
மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தகுந்த முறையில் நன்றாக தேர்வு எழுதிட ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜுன்1 மற்றும் 2) ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து மனுதாரர்களும் இம்மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் அதற்கான ஆதாரம் (Application Copy) மற்றும் புகைப்படத்துடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஜுன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாதிரி தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0422-2642388 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.