கோவை: கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தால் 10 முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஜுன் 22-ம் தேதி நடைபெறுகிறது.

கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தால் 10 முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் காலி பணியிடங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. வரப்பெற்ற விண்ணப்பங்களில் பரிசீலனைக்குப் பிறகு 3,953 விண்ணப்பங்கள் முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு உரியனவாக கண்டறியப்பட்டு, அதன் விவரங்கள் districts.ecourts.gov.in/coimbatore என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை நிர்மலா பெண்கள் கல்லூரி, ரெட் பீல்ட்ஸ்-ல் முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜுன் 22-ம் தேதி காலை 10 முதல் 11 மணி வரை மற்றும் எழுத்து தேர்வில் பெற்றவர்களுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் பணிக்கான நேர்காணல் 23-ம் தேதி காலை 9.30 முதல் நடக்கிறது.
எழுத்துத் தேர்வு/ நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் அஞ்சல்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் வரப் பெறாதவர்கள் தங்கள் பெயர் கோவை மாவட்ட நீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், உரிய ஆவணங்களுடன் அதில் குறிப்பிட்ட தேதியில் எழுத்துத் தேர்வு / நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.