கோவை : சட்ட விரோதமாக பவளப்பாறைகளை வைத்திருந்த ஒருவரை கோவை மாவட்ட வனத்துறையினர் கைது செய்தனர்.

உலகளவில் அழிந்து வருவனவற்றில் ஒன்றாக இருக்கக் கூடிய பவளப்பாறைகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்ட மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பவளப்பாறைகள் இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, சட்டவிரோதமாக பவளப்பாறைகள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒருவரை கைது செய்த வனத்துறையினர், 10 கிலோ பவளப்பாறைகளை பறிமுதல் செய்தனர்.