கோவை : கோவையில் மருத்துவ மேற்படிப்புக்கான சீட் பெற்றுத் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி பணியாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம். நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விஷ்னுதரன் என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு, எம்.எஸ். ஆர்த்தோ படிக்க முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு உறவினர் மூலம் அறிமுகமான கோவையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மூலம் எம்.எஸ்.ஆர்த்தோ படிப்புக்கான இடம் பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் சக்கரவர்த்தி என்பவருடன் இணைந்து ரூ. 70 லட்சம் ரூபாயை கார்த்திக் கேட்டுள்ளார். அதனைக் கொடுக்க சம்மதித்த நாகராஜன் குடும்பத்தினர், சக்கரவர்த்தியின் மனைவி சகுந்தலாவின் வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சம் போட்டு விட்டு, மீதத் தொகையை சக்கரவர்த்தி மற்றும் கார்த்திக் ஆகியோரிடம் நேரில் வழங்கியுள்ளனர்.
பின்னர், போலியான அண்ணாமலை பல்கலைக்கழக சேர்க்கை விண்ணப்பத்தை தயாரித்து நாகராஜிடம் இருவரும் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரித்ததில், தான் ஏமாற்றப்பட்டதை நாகராஜ் உணர்ந்துள்ளார். மேலும், தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதற்கு அவர்கள் இருவரும் நாகராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, கார்த்திக் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் கார்த்திக் மற்றும் சக்கரவர்த்தியின் மனைவி சகுந்தலாவை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள சக்கரவர்த்தியை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.