சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 53 பேர் கைது

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 53 பேரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த 53 பேரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இந்த சட்டவிரோத விற்பனையை தடுக்க காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்தாலும் விற்பனைகள் ஓய்ந்தபாடில்லை. அதேபோல, கேரளா மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து சிலர் கோவை புறநகர் மாவட்டத்தில் தடையை மீறி விற்பதாக மாவட்ட காவல்துறை நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.



இந்த நிலையில், லாட்டரி விற்பனையைத் தடுக்கும் முயற்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின்பேரில், கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் லாட்டரி விற்பனையை தடுக்க சிறப்பு சோதனை நடைபெற்றது. அதன்படி, தனிப்படை போலீசார் பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 28-ம் தேதி 10 பேரும், 29-ம் தேதி 4 பேரும், 30-ம் தேதி 5 பேர் என 19 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல, பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேர்த்து மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...