கோவை : மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.விற்கு இடமளிக்காதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17-வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. குடியரசு தலைவரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்தா கவுடா, நிர்மலா சீதாராமன் ராம் விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பாதல், தவார் சந்த் கெலாட், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ரமேஷ் பொக்ரியால், அர்ஜுன் முண்டா, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 58 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும், 24 இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், இவர்களில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவரும் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். இதனால், மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பதவி கிடைப்பதற்காக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள டெல்லியில் முகாமிட்டிருந்தனர். இதனால், மோடியின் அமைச்சரவையில் அ.தி.மு.க. நிச்சயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.விற்கு இடமளிக்காதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.