நாட்டின் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றார் மோடி : மத்திய அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்பு

டெல்லி : நாட்டின் பிரதமராக 2-வது முறையாக மோடி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

டெல்லி : நாட்டின் பிரதமராக 2-வது முறையாக மோடி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

17-வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பா.ஜ.க. மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பா.ஜ.க. கூட்டணி அரசு அமைக்கிறது.



நாடாளுமன்ற பா.ஜ.க.யின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு குடியரசு ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். அதனடிப்படையில், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முற்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். இதன்மூலம், அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார்.

அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் த்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்தா கவுடா, நிர்மலா சீதாராமன் ராம் விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பாதல், தவார் சந்த் கெலாட், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ரமேஷ் பொக்ரியால், அர்ஜுன் முண்டா, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...