கோவை : நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவை : நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக நாட்டின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை துடியலூரில் வடக்கு மாவட்ட பா.ஜ.க.வினர் பேருந்து நிறுத்ததில் ஜிலேபியை சுடச் சுட சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.

அங்கேயே சமையல் கலைஞர்களை வரவழைத்து கிரைண்டர் மூலம் மாவு அரைத்து சுடச் சுட 10,000 ஜிலேபியைச் சுட்டு ஜீராவில் போட்டு பொதுமக்களுக்கு வழங்கினர். பொதுமக்களும் ஆர்வமுடன் ஜிலேபியை வாங்கிச்சென்றனர். மேலும், தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக வான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.