குன்னூர் ரேலியா அணை நீர்மட்டம் மளமளவென சரிவு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நீலகிரி : குன்னூர் ரேலியா அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் ரேலியா அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவான 43.9 அடியில் 30.2 அடி நீர் இருப்பு உள்ளது. இங்குள்ளதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் குன்னூரில் உள்ள 30 வார்டிற்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நீண்ட காலமாக குன்னூர் பகுதிக்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் தினமும் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், குன்னூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில், ரேலியா அணையில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த இரு நாட்களாக குன்னூர் நகர் பகுதியில் மழைப்பெய்தாலும், அணைப் பகுதியில் இந்த மழைப் பெய்யும் பட்சத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை ஒரளவு சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...