திருப்பூர் : வாகன ஓட்டுநரை தாக்கியதாக முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பொதுமக்கள் சேவூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி ஆலத்தூர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்த பகுதி வழியாக கடந்த செவ்வாய்கிழமை அன்று தனியார் பின்னலாடை நிறுவன பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை மகிமைராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, ஒரு ஆட்டின் மீது வாகனத்தை ஏற்றி விட்டு சென்றதால், ஆத்திரமடைந்த கருப்புசாமி ஓட்டுநர் மகிமைராஜை தாக்கி விட்டு, மீண்டும் இந்த வழியாக வரக்கூடாது என எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் அதே வழியாக மகிமைராஜ் வாகனத்தை இயக்குவதை கண்ட முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமி மகிமைராஜினை வழிமறித்து கடுமையாக தாக்கியதுடன், தனது நிதியில் கட்டப்பட்ட சாலையில் ஏன் வருகிறாய் எனவும் திட்டியுள்ளார். இதனையடுத்து, மகிமைராஜ் தங்கியுள்ள லூர்துபுரம் பகுதி மக்கள் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சேவூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.