கோவை: தொழில் நகரமான கோவை நகர வளர்ச்சியில் சென்னைக்கு அடுத்தபடியாக முன் நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல, பொதுமக்களின் வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் கோவையில் பன்மடங்கு அதிகரித்துள்ளனர். வாகனங்கள் மட்டுமின்றி, சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது.

இந்த சாலை விபத்துகளை கட்டுப்படுத்த சாலை பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதற்காக அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளும் விதிகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
சாலை விதிகள்
இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் ஹெல்மெட் அணிதல், மித வேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னல்களை மதித்தல், நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிதல், போன்ற பல்வேறு விதிகளின் அடிப்படையில் சாலை பாதுகாப்புகள் உள்ளது. அதேபோல, வாகன ஓட்டிகளின் கவனம் திசை திரும்பாமல் இருக்க விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எழுந்தது.
சிக்னல்களில் விளம்பரம் செய்ய தடை
போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகள் வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. எனவே, விளம்பர பலகை வைக்க தடை விதிக்க கோரி, கோவை நுகர்வோர் மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதின்ற நீதிபதிகள் தமிழகம் முழுவதும் சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
கோவையில் விளம்பர நிறுவனங்களும் சிக்னலும்
கோவை மாநகரில் உள்ள சிக்னல்களில் தனியார் நிறுவனத்தினர் டெண்டர் எடுத்து விளம்பரங்கள் செய்து வந்தனர். மேலும் அவர்கள் அந்த சிக்னல்களை பராமரித்தும், மின் கட்டணங்களை செலுத்தியும் வந்தனர். அதேபோல சிக்னல்களை விளம்பர இடமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகளின் கவனம் திசை திருப்பப்படுகிறது எனவும் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இதையடுத்து நீதிமன்றம் சிக்னல்களில் விளம்பரம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது. பின்னர் தனியார் நிறுவனத்தினர் நீதிமன்ற உத்தரவை அடுத்து பராமரிப்பு மற்றும் மின் கட்டணம் செலுத்துவதை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து மின் கட்டணம் செலுத்துவதிலும், பராமரிப்பிலும் சிக்கல்கள் உருவாகியது.
கோவை மாநகரில் உள்ள போக்குவரத்து காவல் மேற்கு எல்லையில் 23 சிக்னல்களும் கிழக்கு எல்லையில் 28 சிக்னல்களும் என மொத்தம் 51 சிக்னல்கள் உள்ளது. இந்நிலையில், உயிர் என்ற தன்னார்வு அமைப்பின் சார்பில் புதியதாக மேற்கு எல்லையில் 5 சிக்னல்கள் கிழக்குப் பகுதியில் 6 சிக்னல்கள் என 11 சிக்னல்களை மாநகர போக்குவரத்து காவல்துறையின் உதவியுடன் அமைத்துள்ளனர்.
இப்படி, கோவை மாநகரில் இப்போது மொத்தம் 62 சிக்னல்கள் உள்ளது. இதில், மேற்குப் பகுதியில் 13 சிக்னல்களும் கிழக்குப் பகுதியில் 11 சிக்னல்களும் என 24 சிக்னல்கள் செயல்படாமல் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படி சிக்னல்கள் செயல்படாமல் உள்ளதற்கு காரணம் மின் கட்டணம் செலுத்தாததால் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் தொடர்ந்து பரிமாறிய பத்திரிகைகளில் சொல்லப்பட்டது.
இதை முற்றிலுமாக மறுத்த போக்குவரத்து காவல் துறையினர், மின்வாரியம் இணைப்பை துண்டிக்கவில்லை எனவும் சிக்னல்கள் பராமரிப்புக்கான மாற்றுத் தீர்வு பணியை தீவிரமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் மொத்தம் 62 சிக்னல்கள் உள்ளது. இதில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 சிக்னல்களை உயிர் தன்னார்வு அமைப்பினர் அமைத்துள்ளனர். இந்த 11 சிக்னல்களுக்கும் இன்னமும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
இதில் மீதம் 51 சிக்னல்கள் மாநகராட்சி டெண்டர் விட்டு இருந்தனர். இந்த டெண்டர் கடந்த ஆண்டு முடிந்து விட்டது. அதேபோல உயர்நீதிமன்றம் சாலை பாதுகாப்பு நலன் கருதி சிக்னல்களிலும் சாலைகளில் விளம்பரங்களை பதிவிட கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதில் விளம்பரத்தை நம்பி இருந்த தனியார் நிறுவனத்தினர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிக்னல்கள் பராமரிப்பு பணியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.
முதலில் விளம்பர நிறுவனங்கள் மூலம் வரும் தொகையை வைத்து மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிக்கல் நிலவியது. ஆனால் தற்போது எழுந்துள்ள கட்டணம் மற்றும் பராமரிப்பு குறித்த சிக்கல்கள் தற்காலிகமானதே. விரைவில் மாநகராட்சி மின் கட்டணம் செலுத்துவதற்கான முயற்சியில் உள்ளது.
இதுவரை, எந்த சிக்னலிலும் மின்னிணைப்பு துண்டிக்கப்படவில்லை. கோவை மாநகர காவல் ஆணையாளரின் முயற்சியில் விரைவில் சிக்னல்கள் பழுதுகள் சரிசெய்யப்பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.