கோவை : விதிமுறைகளை பின்பற்றாத வெள்ளலூர் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளலூர் குப்பை கிடங்கு துப்புரவு தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூரில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும், இதனை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இங்கு நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மற்றும் 36 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், பல வருடமாக பணியாற்றி வரும் தங்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதாகவும், இ.எஸ்.ஐ., பி.எப். இன்சூரன்ஸ் என பிடித்தம் செய்யபடுவது இல்லை எனவும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, என்றனர்.

இந்த நிலையில், தினக்கூலியை உயர்த்தி கேட்டதன் காரணமாக, ஒருமையில் பேசி இனி தொடர்ந்து பணி வழங்க முடியாது எனக் கூறியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது வெள்ளலூர் பேரூராட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கு. இராசமணியிடம் மனு அளித்தனர். மேலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பல்வேறு பரிந்துரைகள் நடைமுறைபடுத்தாத இந்த மனுவை சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனருக்கும் அனுப்பி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.