குன்னூர் பழக்கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்களின் மூலம் ஜாம், நெல்லி தயாரிக்கும் பணிகள் தீவிரம்

நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட 1.5 டன் பழங்களை வைத்து ஜாம், ஜெல்லிகளை தயாரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட 1.5 டன் பழங்களை வைத்து ஜாம், ஜெல்லிகளை தயாரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. இதில், பலா, ஆரஞ்ச், பப்ளிமாஸ், சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை, நாவல், மாம்பழம், வாழை, பேரி, பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி உட்பட நீலகிரியின் பாரம்பரிய பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த பழங்களைக் கொண்டு முகப்பு வாயிலில் மயில், வண்ணத்து பூச்சி, விவசாயிகளுடன் மாட்டு வண்டி ஆகிய வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியில் பழங்கள் சேதமடைந்து வீணாவதை தவிர்க்கும் விதமாக, அனைத்து பழங்களும் நூலில் கோர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதனால், ஆண்டுதோறும் காட்சிபடுத்தப்படும் டன் கணக்கான பழங்கள் குழி தோண்டி புதைக்கும் நிகழ்வு இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டது. 



இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க காட்சிக்கு பயன்படுத்திய அனைத்து பழங்களிலும், ஜாம், ஜெல்லி தயாரிக்க தோட்டக்கலை துறை முடிவு செய்தது. இதன் அடிப்படையில், பழக்கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில், இந்த பழங்கள் வடிவமைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டு, பழவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அனைத்து பழங்களும் ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிக்க பிரிக்கும் பணிகள் துவங்கின. பின்னர், இவற்றைக் கொண்டு தரமான ஜாம், ஜெல்லி தயாரிக்கும் பணியில் தோட்டக்கலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...