கோவை : கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கு அனுமதி வழங்க 2.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட 2 பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சோமசுந்தரம் என்பவர் கோவையின் பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சுந்தராபுரம் பகுதியில் புதிதாக வாங்கிய நிலைத்தை வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்த தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், தனது அலுவலக உதவியாளர் ஆனந்தகுமார் மூலம் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அதனை தர மறுத்த சோமசுந்தரம் 5 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதுடன், அதில் முதல்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாகவும், சான்றிதழ் வழங்கிய பின்னர் மீதத் தொகையை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையிடம் புகார் அளித்த அவர், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு அதிகாரியை வரவழைத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகள் 2.50 லட்சத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அங்கு அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் உதவியாளர் ஆனந்தகுமார் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யபட்ட இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தோத்திரமேரி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டனர்.
அப்போது, இருவரையும் வருகின்ற ஜூன் 13-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்தோத்திரமேரி உத்தரவிட்டார்.