கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சுற்றி திரிந்த மானை நாய்கள் வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

மருதமலை அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. எனவே, இதனை ஒட்டி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்றிரவு மான் கூட்டங்கள் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் உலா வந்துள்ளது. அப்போது, அவற்றை நாய்கள் துரத்தி உள்ளன. இதில், ஒரு மானை மடக்கி பிடித்து கடித்து குதறியுள்ளன. இதனால், பலத்த காயமடைந்த அந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.