வற்றாத ஜீவநதியாக இருந்த பவானி ஆறு வறண்டு வரும் அவலம் : அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடி வரும் பவானி ஆறு தற்போது பொலிவிழந்து காணப்படுவதால், அத்திக்கடவு - அவினாசி உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடி வரும் பவானி ஆறு தற்போது பொலிவிழந்து காணப்படுவதால், அத்திக்கடவு - அவினாசி உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் உருவாகி கேரள காடுகளின் வழியே உருண்டோடி, கூடப்பட்டி என்னும் இடத்தில் மேட்டுப்பாளையம் பகுதியை வந்தடைந்து, பில்லூர் அணையை அடைகிறது பவானி. பில்லூர் அணையில் இருந்து மீண்டும் புறப்பட்டு மேட்டுப்பாளையம் வழியே வழிந்தோடி, பவானி சாகர் அணையை அடைகிறது இந்த பவானி ஆறு.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடி வரும் இந்த பவானி ஆற்று நீரினை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளன. பில்லூர் அணையின் மேற்பகுதியில் இரண்டு மிகப்பெரிய கூட்டு குடிநீர் திட்டங்களும், அணையின் கீழ் பகுதியான மேட்டுப்பாளையத்தில் பத்துக்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பில்லூர் அணைப்பகுதியில் உள்ள அத்திக்கடவுக்கு மேற்கு பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களுக்கும், அங்குள்ள கால்நடைகளுக்கும், ஏன் வனஉயிரினங்களுக்கும் இந்த ஆறுதான் குடிநீராக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே வறட்சி காரணமாக பவானி ஆறு தனது தனித்தன்மையை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர்வரத்து குறைந்து, இன்று முற்றிலும் நீர் வரத்தானது தடைபட்டு வற்றிபோனது. அத்திக்கடவு பகுதிக்கு வரும் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து ஏதும் இன்றி ஆறு முழுவதும் வெறும் கூழாங்கற்கள் மட்டுமே காட்சி அளிக்கின்றன. இதனால், அணைக்கு வரும் நீர் வரத்தும் தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. இந்தப் பகுதியில் கரையோரம் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிப்பதுடன், ஆற்றில் குளி தோண்டி நீர் ஊற்றுகள் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர். பவானி ஆற்றில் இதே நிலை தொடர்ந்தால், தற்போது செயல்படுத்தபட்டுள்ள குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்த முடியாத அளவிற்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 



எதிர்வரும் தென்மேற்கு பருவமழை கேரளாவில் அதிக அளவில் இருந்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற அளவிற்கு உள்ளதால், குடிநீருக்கு கடும் பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...