நீலகிரி : குன்னூரில் காட்டெருமை தாக்கி காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரியில் வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு மாநில அரசின் சார்பில் 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. கேரளாவில் வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வனவிலங்குகள் தாக்கி காயமடைந்தவர்களுக்கு, குறைந்த பட்சமாக 30 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், குன்னூர் தூதூர்மட்டம் பகுதியில் கடந்த 22ம் தேதி காட்டெருமை தாக்கி காயமடைந்த தனலட்சுமி (28), சுருதிகா (13), ஆகியோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், தனலட்சுமி காலில் பலத்த காயத்துடன் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை வனத்துறையினர் இதுவரை வழங்காமல் உள்ளதால், அத்தியாவசிய செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தனலட்சுமியைக் கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதால், அவரது கணவர் ஈரோட்டில் ஓட்டுநர் பணிக்கு செல்ல முடியாமலும், தனலட்சுமியின் பெற்றோர் கூலி வேலைக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனலட்சுமியின் தாயார் சிவகாமி கூறுகையில், ''காட்டெருமை தாக்கியதிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை. சுருதிகாவுக்கு மட்டும் 5,000 ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நாங்கள் வேலைக்கு செல்ல முடியாததால் அத்தியாவசிய செலவுக்கு கூட தொகை இல்லாமல் உள்ளோம்,'' என்றனர்.
இது பற்றி குன்னூர் ரேஞ்சர் சரவணன் கூறுகையில், "டாக்டர் சான்றிதழ் பெறப்பட்டு ஒருவருக்கு, 5,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிவாரண தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.
நீலகிரியில் அதிகளவில் வன விலங்குகளின் தாக்குதல் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.