கோவை : கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்படும் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் வரும் ஜுன் 3-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், பள்ளியின் வளாகம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் விதமாக பல்வேறு அறிவுரைகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் மற்றும் கோவை மாநகராட்சி உதவி ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட வழிமுறைகள் கடைபிடிக்க அறிவுறுத்தல் :
• பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே சேகரமாகி இருக்கும் குப்பைக் கூளங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
• பள்ளிகள் தொடர்ந்து விடுமுறை நாட்கள் மூடப்பட்டு மீண்டும் திறக்கும் நிலையில் உள்ளதால், பள்ளிகள் திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக பள்ளிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளை பிளீசிங் பவுடர் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.
• மேல்நிலை தொட்டி சுத்தம் செய்த தேதி பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
• பள்ளிகளில் குடிநீர் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், சில்வர் பாத்திரம், குடம் ஆகியவை பள்ளிகள் திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
• தற்சமயம் மழை பெய்துள்ளதால் பள்ளிகளில் உள்ள மாடிகளில் மழை நீர் தேங்கியிருந்தால், அதனை சுத்தம் செய்யப்பட வேண்டும். மாடிகளில் உள்ள பயன்படுத்தப்படாத பென்ச், டெஸ்க் மற்றும் இதர பொருட்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் அதனை முறையாக அடுக்கி வைக்க வேண்டும்.
• பள்ளிகளில் உள்ள மாடிகளில் உள்ள வடிகால் அமைப்பு இலை தழைகளால் அடைக்கப்பட்டிருந்தால், அதனை சுத்தம் செய்து கொசுப்புழு உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும்.
• பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் பள்ளிகள் திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
• மதிய உணவு சமைக்கும் பாத்திரங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஸ்டோர் ரூமில் சுகாதாரமில்லாத பழைய பொருட்களாக (அரிசி, பருப்பு, முட்டை) ஆகிய பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. புதிய உணவுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
• அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக உறுதி செய்து அறிக்கையை மாநகராட்சி சுகாதாரப்பிரிவிற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் சமர்பிக்க வேண்டும்.
• மேலும், மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளரின் வழிகாட்டுதலின்படி, துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை முறையாக பராமரிக்காமல் பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் சுகாதார பாதிப்பு ஏற்பட்டால், பள்ளி நிர்வாக அலுவலர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.