நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த மழையின் காரணமாக மலைப்பாதையில் ராட்சத மரம் விழுந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பர்லியார், காட்டேரி, மரப்பாலம் மற்றும் அருவங்காடு பகுதிகளில் நேற்றிரவு விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையினால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் மரப்பாலம், காட்டேரி பூங்கா இடையே ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுார் நோக்கி வந்த இருசக்கர வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த விபத்தில், பாலக்காடு மாவட்டம் முத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் பிரதீப் (26) மற்றும் பிரதீஷ் (27) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ராட்சத மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட பிரதீப்பை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரதீஷ் குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், காரில் வந்த சுற்றுலா பயணிகள் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

உயிரிழந்த பிரதீப் கோவை ராணுவ மையத்தில் பயற்சி பெற்று வரும் ராணுவ வீரர் ஆவார். இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு தகவல் அளிக்கப்பட்டது.