நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.

கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஒரு சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகளின் தர நிர்ணயம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் மாவட்டத்தில் உள்ள 257 பள்ளி மினி பேருந்துகள், பெரிய பேருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், பேருந்து இருக்கை, அவசர கால வழி, முதலுதவிப்பெட்டி, தீயணைப்பு சிலிணடர், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது. அப்போது, முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.