மீண்டும் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் வனக்காப்பகம் : புலிகள் நடமாட்டம் இருப்பதால் வனம் செழிப்பாக இருப்பதாக வனஆர்வலர்கள் மகிழ்ச்சி

நீலகிரி : முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பிய நிலையில், அங்கு புலிகள் நடமாட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி : முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பிய நிலையில், அங்கு புலிகள் நடமாட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக, முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி உள்ளிட்ட இடங்களின் வனப்பகுதிகள் வறண்டு கிடந்ததால் வன விலங்குகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பகுதியில் மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது. மேலும், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைத்து வருவதால், மசினகுடி பகுதியி்ல் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.



இந்த நிலையில், இன்று மசினக்குடி சாலையின் ஓரத்திலேயே புலி நடமாடியதை மசினகுடி - உதகை சாலையில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். இதனிடையே, புலிகள் நடமாட்டம் இருப்பதால், மசினக்குடி பகுதி தற்போது செழிப்பாக இருப்பதாக வன ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...