கோவை: உலக அருங்காட்சியக தினமான இன்று கோவை வஉசி மைதானத்திற்கு எதிரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய இசைக்கருவிகள் கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
கோவை: உலக அருங்காட்சியக தினமான இன்று கோவை வஉசி மைதானத்திற்கு எதிரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய இசைக்கருவிகள் கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
இந்த கண்காட்சியில் பழங்கால இசைக்கருவிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்ட பழங்கால இசை கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் பாரம்பரிய இசைக் கருவிகள் கண்காட்சியில் கொம்பு செட்டு, குழி தாளம், கொக்கரை, உருமி போன்ற பழங்கால கருவிகளும், கச்சேரிகளில் பயன்படுத்தப்பட்ட வீணை, மிருதங்கம், தவில் போன்ற கருவிகளும், கொங்கு மண்டலத்தில் திருவிழா காலங்களில் போது வாசிக்கப்படும் சக்தி மத்தாளம், ஜமாப் போன்ற கருவிகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடக்கிறது. இந்தக் கண்காட்சியைக் காண பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் ஆர்வத்துடன் வருகிறார்கள். இக்கண்காட்சியை பார்வையிட பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், பெரியவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நமது பாரம்பரிய இசை மற்றும் இசைக்கருவிகள் அழிந்து வரும் நிலையில், மக்களுக்கு இசை மற்றும் இசைக்கருவிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட இந்த கண்காட்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த இசை கலைஞர் ஆர்தர் பிரதீப் மூலம் இசை கருவிகளை மக்களுக்கு இசைத்துக் கட்டி இசையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு அளிக்கிறார்கள். இசை என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இசையை வளர்க்கும் நோக்கத்தில் பாரம்பரிய இசை வாத்தியங்களை மக்களுக்கு காண்பிக்க இக்கண்காட்சியானது இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியை கோவை கல்யாணி மியூசிக் சென்டர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். கோவை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் மற்றும் அருங்காட்சியக காவலர் ஷர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.