வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார்.

கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார். 

கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் இந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தக் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை இரவு பகலாக போராடி தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அணைத்தனர். 

இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார். அவருடன் மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...