கோவை : பொன்னையராஜபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை : பொன்னையராஜபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உஷாராணி. இவரது வீட்டின் முன்பு 12 அடி கழிவுநீர் தொட்டி உள்ளது. அங்கு சுற்றி திரிந்த பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதனைக் கண்ட உஷாராணி, மத்திய தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். தீயணைப்புத்துறையினரின் இந்த துரித நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.