திருப்பூர் : திருப்பூரில் போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து, முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 19 வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூருக்கு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமர தோட்டப் பகுதியில் தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வங்கதேச இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கதேச இளைஞர்கள் ஒரு குழுவாக அவர்கள் நாட்டில் இருந்து கள்ளத்தோணி மூலம் மேற்குவங்கம் வந்தது தெரிய வந்தது. மேலும், அங்கு சில நாட்கள் தங்கி இருந்து போலியாக ஆதார் கார்டு தயாரித்து, அதன் பிறகு திருப்பூர் வந்து கடந்த சில ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இவர்களிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களும் முறையாக இல்லாத காரணத்தால் சுமன், சமீம், அப்துல் கலாம் உள்ளிட்ட 19 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல, கடந்த 6 மாதத்திற்கு முன்பு முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 16 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.