கோவை : கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த திடீர் மழையினால், கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
கோவை : கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த திடீர் மழையினால், கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு, வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு கோவையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். கடும் வெயில் காரணமாக அவதிப்பட்டு வந்த கோவை மக்களை இந்த மழை மகிழ்ச்சி அடைய செய்தது.