Breaking: கோவை சரவணா செல்வரத்தினம் கடை வளாகத்திற்கு சீல் வைப்பு

கோவை : விதிகளை மீறி கூடுதல் தளங்கள் கட்டியதால் ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடை வளாகத்துக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக சீல் வைத்தனர்.


கோவை : விதிகளை மீறி கூடுதல் தளங்கள் கட்டியதால் ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடை வளாகத்துக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக சீல் வைத்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகள் என பல்வேறு கடைகள் உயரமான கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒப்பணக்கார வீதியில் பிரபல சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான கடை செயல்பட்டு வருகிறது. 



இந்த நிறுவனம், பார்க்கிங் இடத்தை குடோனாக பயன்படுத்தியது, திறந்தவெளி பகுதியை விடாமல் இருந்தது ஆகிய காரணங்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், ஒப்பணக்கார வீதி சரவணா செல்வரத்தினம் வளாகத்துக்கு உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர். துணிக்கடையாக செயல்படும் இக்கட்டிடம், தரைத்தளம் மற்றும் 5 தளங்கள் கொண்டது. கட்டிடத்திற்கு சீல் வைக்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, முன்னேச்சரிக்கையாக போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...