கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால், குளங்களை வளமாக வைத்துக் கொள்ள உதவும் நீர்வாழ் தாவரங்கள் முற்றிலும் அழிவை சந்தித்துள்ளன.

தமிழக நகர்ப்புறங்களில் இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகளில் முதல்முறையாக தாவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. வன மரபியல் நிறுவனம் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் பல்லுயிர் துறை தலைவர் சி. குன்ஹிகண்ணன் தலைமையின குழுவினர், குளத்தின் அனைத்து பகுதிகளில் ஆய்வு நடத்தி தாவரங்களின் வகைகளைச் சேகரித்தனர். பின்னர், அதில், சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆகாய தாமரைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தாவரங்கள் சூழ்ந்து இருக்கும் சிங்காநல்லூர் குளத்தில், நீர் மாசடைவதுடன், அதில் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முறையான பராமரிப்பு இல்லாததால், நீர்வாழ் தாவரங்கள் அழிந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
"குளங்களில் வழக்கமாகக் காணப்படும் நீர்வாழ் தாவரங்கள் கூட சிங்காநல்லூர் குளத்தில் காண முடியவில்லை. இங்கு வெறும் ஆகாய தாமரைகள் போன்ற நீர் ஆக்கிரமிப்பு தாவரங்களே உள்ளன. நீர்வாழ் தாவரங்கள் குளத்தின் நீரை தூய்மைப்படுத்துவதுடன், குளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனை சீராக வழங்குகிறது. மேலும், தண்ணீரில் வாழும் உயிரினங்களுக்கு சிறப்பான இனப்பெருக்கத்திற்கும் வழிவகை செய்கிறது. ஆனால், ஆக்கிரமிப்பு தாவரங்கள் சூரிய ஒளியை நீரில் படாதவாறு மூடி, நீர்வாழ் உயிரினங்களின் உயிர்களுக்குத் தீங்கை ஏற்படுத்துகின்றன," என சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகிறார் வன மரபியல் நிறுவனம் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் பல்லுயிர் துறை தலைவர் சி. குன்ஹிகண்ணன்.
அண்மையில் நடத்தப்பட்ட தாவர கணக்கெடுப்பின் மூலம் சிங்காநல்லூர் குளத்தைச் சுற்றியுள்ள மொத்த பரப்பளவில் 453 தாவர இனங்கள் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதில், 72 சதவீதம் (328) மூலிகை தாவரங்களாகும்.
கோவையில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் கழிவுநீர் கலக்கும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, சிங்காநல்லூர் குளத்திற்கு மீனவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். அதேவேளையில், சங்கனூர் கால்வாய், ராஜவாய்க்கால் மற்றும் கணபதி உப்பிலி பாளையம் ஓடை ஆகிய 3 முக்கிய வழிகள் மற்றும் 2 கிராம சிறு ஓடைகளின் வழியாக என சிங்காநல்லூர் குளத்திற்கு நீர் வந்து சேருகிறது. ஆனால், மீன்பிடிக்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக இந்த நீர் செல்லும் பாதைகளை, குளத்தில் மீன்பிடிக்க வரும் மீனவர்கள் அடைத்து விடுகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு கோவை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், சிங்காநல்லூர் குளம் உள்பட கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேசமயம், கோவை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, இது தொடர்பாக முக்கிய விவாதமும் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.
இதனிடையே, இது தொடர்பாக பதிலளித்த கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜாவத், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது, குளங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்," என உறுதியளித்துள்ளார்.