கோவை : தமிழகம் முழுவதும் கடும் வெயில் மற்றும் அனல்காற்றும் வீசி வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு தமிழக ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைப்பதுடன், அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால், பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், கோரிக்கையை நிராகரித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி எனக் கூறினார்.
இந்த நிலையில், கடும் வெயிலோடு அனல் காற்றும் வீசுவதால் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பாடங்களை கவனிக்க மாணவர்களின் உடல்நலம் மிக அவசியம் என்பதால் 2 வாரங்கள் அல்லது வெயிலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.