மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் மறுபிரேத பரிசோதனை நிறைவு : நீதிபதி நேரில் சென்று ஆய்வு

கோவை : கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


கோவை : கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காசாளர் பழனிச்சாமி கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பழனிச்சாமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மகன் ரோகின் குமார் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 8-ல் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 5-ம் தேதி செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் இறுதியறிக்கை ஆகியவை முழுமையாகவும், திருப்திகரமான வகையிலும் இல்லை என்பதால், பழனிச்சாமியின் உடலை 28-ம் தேதி மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியது. மேலும், இந்தப் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலக காசாளர் பழனிச்சாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் பணி 11.30 மணிக்கு தொடங்கி 4 மணிக்கு நிறைவு பெற்றது. மாஜிஸ்திரேட் ராமதாஸ் மேற்பார்வையில் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனை தலைமை மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவர் கோகுல்ராம், கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் பழனிச்சாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், பிரேத பரிசோதனை முடிந்த பின்பு குழுவினர் பழனிச்சாமி உயிரிழந்த குளத்தை பார்வையிட சென்றுள்ளனர்.



இந்த நிலையில் பழனிச்சாமியின் மனைவி செய்தியாளர்களிடம் கூறும்போது :- பிரேத பரிசோதனை முடிந்தவுடன் எங்கள் தரப்பு மருத்துவ குழுவினர் எனது கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த குளத்தை பார்வையிடச் சென்றுள்ளனர். இந்த பிரேத பரிசோதனை குறித்து இதுவரை மருத்துவர்கள் தரப்பில் எந்த பதிலும் எங்களிடம் சொல்லவில்லை. ஒருவேளை கொலையாக இருக்கும் பட்சத்தில், கொலை குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்க வேண்டும். ஒருவேளை தற்கொலையாக இருந்தால் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து இறந்த சம்பவத்தில் எனது கணவரின் மரணம் குறித்து காவல்துறைக்கு நாங்கள் புகார் அளித்தும், மார்ட்டின் உள்ளிட்டவர்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

மருத்துவர்கள் கூறும் முடிவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...