கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிரபல கே.பி.ஆர். மில், எத்தியோப்பியா நாட்டில் தனது கிளையை விரிவுபடுத்தியுள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆடை தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர். மில், எத்தியோப்பியா நாட்டில் உள்ள மக்கெல்லே தொழிற்சாலை பூங்காவில் தயாரிப்பு கிளையை தொடங்கியுள்ளது. இது, அந்நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு கிளையாகும். இதற்காக, மொத்தம் 15 மில்லியன் டாலரை முதலீடாக கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக, 5 மில்லியன் டாலர் மூலம் 'கே.பி.ஆர். ஏற்றுமதி பிரைவேட் லிமிடெட் கம்பெனி' எனத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முன்னோட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கிளையின் மூலம் தற்போது வரை 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், 53,300 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கிளையில் மொத்தம் உள்ள 20 ஆடை தையல் பிரிவுகளில், 12 பிரிவுகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அதோடு, பின்னலாடை தயாரிப்புகளில் கட்டிங், ப்ரசிங், பேக்கிங் உள்ளிட்ட துறைகள் இயங்கி வருகின்றன. எத்தியோப்பியாவில் இருந்து 12 பேர் கோவை நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு பயிற்சி அழைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவர்கள் எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து நிர்வாக இயக்குநர் சக்திவேல் கூறுகையில், "வெளிநாட்டில் முதல்முறையாக நிறுவப்பட்ட முதல் தயாரிப்பு நிறுவனமாகும். மக்கெல்லே யூனிட் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எளிதில் ஏற்றுமதி செய்ய இயலும். கே.பி.ஆர். குழுமத்தின் மார்க்கெட் அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது. அண்மையில் FASO என்ற உள்ளூர் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பிற நாடுகளிலும் கிளைகளை விரிவுபடுத்துவது பற்றி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது," என்றார்.