கோவையில் ஓசை அமைப்பின் சார்பில் 115-வது 'சுற்றுச்சூழல் சந்திப்பு' நிகழ்ச்சி

கோவை : சித்தாபுதூர் உயர்நிலைப் பள்ளியில் ஓசை அமைப்பின் சார்பில் 115-வது 'சுற்றுச்சூழல் சந்திப்பு' நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : சித்தாபுதூர் உயர்நிலைப் பள்ளியில் ஓசை அமைப்பின் சார்பில் 115-வது 'சுற்றுச்சூழல் சந்திப்பு' நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அறம் செய் அறக்கட்டளையின் நிறுவனர் எஸ். அருள்சேகர், நகர்ப்புறங்களில் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நடவு செய்வது எப்படி..? என்பது குறித்து விளக்கிக் கூறினார். இவரது அறக்கட்டளையின் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 12,000 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. 



"பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் சார்பில் பல லட்சம் அளவிலான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மரக்கன்றுகள் மரங்களாக வளர்ந்து நிற்பதில்லை. முறையற்ற பராமரிப்பு மற்றும் தகுதியற்ற மரக்கன்றுகளின் தேர்வு போன்றவற்றினால் மரக்கன்றுகளின் வளர்ச்சியில் தோல்வியடைகின்றன," என்கிறார் எஸ். அருள்சேகர்.

மேலும், இடத்திற்கு தகுந்தவாறான மரக்கன்று தேர்வு செய்ய வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகள், அரசு கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளில் பலவிதமான மரங்களை நடவு செய்தால், நல்ல முடிவு கிடைக்கும் என பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், நெடுஞ்சாலைத் துறை, வடிகால் வாரியம், மனிதர்கள் மற்றும் கால்நடைகளே மரங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் கூறினார். 



ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என முதலில் திட்டம் தீட்டிய அருள்சேகர், நிதி மற்றும் பராமரிப்பு காரணங்களால் 12,000 மரங்களுடன் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் இவரது திட்டத்திற்கு ஈரோடு மாநகராட்சி தண்ணீர் விநியோகம் செய்து உதவியது. நடவு செய்யப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் தலா ரூ. 500 வரையிலும் செலவிட்டு, பறவைகளுக்கான கூடாரம், உணவு போன்றவற்றை அமைத்துள்ளார். 

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதிய 'தி கிரீன் பாலிட்டிக்ஸ்' (ஆங்கில பதிப்பு), பி. மோகன் பிரசாத் மற்றும் என். சதீஷ் ஆகியோரின் 'தமிழகத்தின் பட்டாம்பூச்சிகள்', வி.எஸ். ராமச்சந்திரன் மற்றும் ஆர். அருணா ஆகியோரின் 'ஃபாரஸ்ட் பிளேன்ட் ஐடென்டிஃபிகேசன் மேனுவல்' ஆகிய 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...