கோவையில் நிலத்தை விற்பனை செய்வதாக 32 லட்சம் மோசடி : பெண் உள்பட 2 பேர் கைது

கோவை : சிவானந்தபுரம் அருகே நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி 32 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : சிவானந்தபுரம் அருகே நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி 32 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

புதுசித்தாபுதூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஸ்வரி என்பவர் சிவானந்தபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் கிளினிக் அமைப்பதற்காக சொந்தமாக நிலத்தை வாங்க திட்டமிட்டிருந்தார். இதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை அணுகி, 1 1/2 சென்ட் பரப்பளவில் பழைய கட்டிடத்துடன் இருக்கும் நிலத்தை வாங்க முடிவு செய்து, இதற்காக ரூ. 32,50,000 மற்றும் பழைய கட்டிடத்தை ரூ.70,000 போகியத்திற்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார். 

ஆனால், நிலத்தை கிரையம் செய்யாமல் ராஜேந்திரன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், அந்த இடத்தை தனது உறவுக்காரரான சாவித்ரி என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். பின்னர், இது தொடர்பாக மருத்துவர் ராஜேஸ்வரி, ராஜேந்திரனின் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டதற்கு, இடத்தையோ, பணத்தையோ திருப்பிக் கொடுக்க முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனால், ஏமாற்றம் அடைந்த மருத்துவர் ராஜேஸ்வரி, பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்காமல் மோசடி செய்தது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ராஜேந்திரன் மற்றும் உறவுக்கார பெண்ணான சாவித்ரி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...